Tuesday, August 2, 2011

ஈமு முட்டை சீசன் ஆரம்பித்து விட்டது....!!!!

ஈமு  தாய்க்கோழிகள் முட்டையிட ஆரம்பித்து  விட்டன‌.  அங்கொன்றுமாக சில பண்ணை களில் ஒரு சில கோழிகள்  முட்டையிட ஆரம்பித்தாலும், முழு வீச்சில் இன்னும் ஆரம்பிக்க வில்லை. இதனால் இந்த முட்டைகளை வைத்து இன்குபேட்டரையும் ஓட்ட முடியாது. ஏனெனில், இன்குபேட்டரை ஓட்ட வேண்டுமானால், குறைந்த பட்சம் 60 முட்டைகளாவது இருந்தால் தான், உற்பத்திச் செலவு கட்டும். அது வரை என்ன செய்வது.... பிரிட்ஜில் 18 டிகிரி அளவில் அதைப் பாதுகாக்கலாம். அல்லது, இருட்டான குளிர்ந்த பகுதியில் மண் பானைக்குள் வைத்துப் பாதுகாக்கலாம்.  பிரிட்ஜைப் பொறுத்தவரை, முட்டையை பயன்படுத்த வெளியில் எடுக்கும் போது,  வெளியில் எடுத்து குறைந்தது 8 மணி நேரமாவது வைத்திருப்பது மிக  அவசியம். அப்போது தான் முட்டையின் குளிர்த்தன்மை போய்  நார்மலுக்கு வரும்.


முட்டை என்ன விலைக்கு போகிறது..?   இப்பொழுது சொல்ல முடியாது.. இன்னும் பத்து நாள் ஆவது போக வேண்டும். சந்தையில் முட்டையின் தேவையைப் பொறுத்தும், முட்டையின் வரத்தைப் பொறுத்தும் விலை நிர்ணயம் ஆகும்.